Thursday, January 12, 2012இலங்கை::மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் விநியோகம்:ஒருவர் பெல்லந்தர பிரதேசத்தில் வைத்து கைது:-
நீண்டகாலமாக ஹெரோயின் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் பெல்லந்தர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபரிடமிருந்து சுமார் 240 ஹெரோயின் பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர் கல்கிசை - படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment