Thursday, January 12, 2012

யாழ்ப்பாணம் தலைமையக புதிய பொலிஸ் நிலையக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் நடைபெற்றது!

Thursday, January 12, 2012
இலங்கை::யாழ்ப்பாணம் தலைமையக புதிய பொலிஸ் நிலையக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் அதிகாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிகாலை 6.23க்கு கட்டிடத் தொகுதிக்கான தளத்தை வெட்டியதுடன் 6.44க்கு அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.

அமைச்சர் அவர்களைத் தொடர்ந்து வடபகுதிக்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நீல்தளுவத்த 512வது படையணியின் கட்டளைத் தளபதி அஜித் பல்லேவல யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரால் அடிக்கற்கள் நாட்டி வைக்கப்பட்டன.

1927ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ் பொலிஸ் நிலையம் யாழ் துரையப்பா விளையாட்டரங்கை அண்மித்த பகுதியில் செயற்பட்டு வந்த நிலையில் 1984ம் வருடம் ஏப்ரல் மாதம் 10ம் திகதி தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று அடிக்கல் நடப்பட்டுள்ள இப்புதிய கட்டிடத்திற்கு 294 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment