Thursday, January 12, 2012

12 வயதுக்கு கீழ்பட்ட இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் இனி விசா கட்டணம் செலுத்த வேண்டியதில்லை!

Thursday, January 12, 2012
இலங்கை::48 மணித்தியாலங்கள் (2 நாட்கள்) தங்கியிருக்கும் நோக்க்கில் இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் 12 வயதிற்கு கீழ்பட்ட பிள்ளைகளுக்கு விசா கட்டணம் அறவிடப்பட மாட்டாதென இலங்கை அறிவித்துள்ளது.

போக்குவரத்து பயணிகள் என்ற திட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன்மூலம் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தமது பிள்ளைகளை இலவசமாக அழைத்து வர முடிவதோடு, எதிர்காலத்தில் அப்பிள்ளைகள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள இத்திட்டம் தூண்டுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment