Thursday, January 12, 2012

மாநகர சபைகளாக மாறவுள்ள மேலும் மூன்று உள்ளூராட்சி மன்றங்கள்!

Thursday, January 12, 2012
இலங்கை::அரசாங்கம் மேலும் மூன்று உள்ளூராட்சி மன்றங்களை மாநகர சபைகளாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளது.

அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களை மாநகர சபைகளாக மாற்றுவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுத் தெரிவித்துள்ளது.

அம்பாறை நகர சபையை மாநகர சபையாக மாற்றுவதற்குத் தேவையான பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் சனத்தொகை அதிகரிப்பு, அபிவிருத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளமை ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டே அவற்றை மாநகர சபைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடுவெல பிரதேச சபை மாநகர சபையாக மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment