Tuesday, January 3, 2012

இலங்கையை ஆசியாவின் ஆச்சரிய நாடாக மாற்றுவதற்கு எமது தகவல் ஊடகத்துறை அமைச்சு ஊழியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம்:கெஹெலிய ரம்புக்வெல!

Tuesday, January 03, 2012 12
இலங்கை::இலங்கையை ஆசியாவின் ஆச்சரிய நாடாக மாற்றுவதற்கு எமது தகவல் ஊடகத்துறை அமைச்சு ஊழியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புது வருடத்தில் புதிதாக பணிகளை ஆரம்பிக்கும் முகமாக தகவல் ஊடகத்துறை அமைச்சின் சுற்றாடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.

இரண்டரை வருட காலத்துக்கு முன்னர் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இழந்தவர்களாக இலங்கை மக்கள் காணப்பட்னர்.வங்கரோத்து அடைந்த ஒரு நாடாக உலகம் இலங்கையைப் பார்த்தது.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த நிலையை மாற்றியமைத்தார்.நாட்டு மக்களின் ஆசீர்வாதமே அவருக்கு இந்த வெற்றியை வழங்கியது.கடந்த 30 வருடங்களில் நாம் இழந்தவை அதிகம். விலை மதிக்க முடியாக உயிர்களையும் சொத்துக்களையும் இழந்தோம்.இன்று இலங்கையை ஆசியாவின் ஆச்சரிய நாடாக மாற்றுவதற்கு அனைவரும் ஆவல் கொண்டுள்ளோம்.அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு கடுமையாக உழைக்க வேண்டும். முக்கியமாக தகவல் ஊடகத்துறை அமைச்சு ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

எமது நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் உருவாக்கப்பட்ட இன ரீதியான பிரச்சினைகள் இன்னும் நூறு வீதம் தீரவில்லை.பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றால் எமது சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி.கனேகல தலைமையில் அமைச்சின் ஊழியர்கள் புது வருட சத்தியப் பிரமாணம் எடுத்தனர்.இறுதியாக சமய வைபவங்களும் இடம்பெற்றன

No comments:

Post a Comment