Monday, January 02, 2012ராமநாதபுரம்::ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து, வாரத்துக்கு 10 முதல் 15 பேர் வரை இலங்கைக்கு திரும்பிச் செல்லத் துவங்கியுள்ளனர்.
மண்டபம் அகதிகள் முகாம், 1940ல் பர்மாவில் இருந்து வந்த அகதிகளுக்காக கட்டப்பட்டது. 1983ல், இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த பின், அங்கிருந்த தமிழர்கள், இந்தியாவுக்கு வரத்தொடங்கினர். மண்டபம் முகாம், இவர்களை தங்க வைக்கும் இடமாக மாறியது. இதில், 10 ஆயிரம் பேர் வரை தங்கியிருந்தனர்.
கடந்த 26 ஆறு ஆண்டுகளாக நடந்த இலங்கை உள்நாட்டுப் போர், 2009ல் நிறைவுக்கு வந்தது. இதையடுத்து, வாரம் 15 பேர் வரை இலங்கை திரும்பிச் செல்ல துவங்கியுள்ளனர். தற்போது இந்த முகாமில், 2,400 பேர் மட்டுமே உள்ளனர்.இலங்கை வவுனியாவைச் சேர்ந்த அகதி ஒருவர், "சிறுவயதில் இங்கு வந்தேன். மீண்டும் அங்கு செல்கிறேன். எங்கள் நிலம் கிடைக்குமானால் மிகுந்த சந்தோஷம். இல்லையென்றாலும், விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளலாம். தாயகத்திற்கு திரும்புவது சந்தோஷமளிக்கிறது' என்றார்.
No comments:
Post a Comment