Monday, January 02, 2012இலங்கை::நாட்டில் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது வேறு சர்வதேச சக்திகளுக்கோ இந்த நாட்டின் அதிகாரத்தை பகிர்வதற்கு ஜாதிக ஹெல உறுமய கட்சி இடமளிக்காது என்றும் தற்போதைய அரசாங்கத்தை ஆட்டுவித்தோ அல்லது அச்சுறுத்தியோ அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ள முடியும் என எவரேனும் நினைத்தால் அதனை ஓர் நகைச்சுவையாகவே கருத வேண்டும் என அமைச்சர் சம்பிக்க தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிறந்த பின்னணியைக் கொண்டு விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த நாட்டில் இனப்பிரச்சினை ஒன்று இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தள்ளார்.
No comments:
Post a Comment