Monday, January 2, 2012

தூத்துக்குடி & கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல்!

Monday, January 02, 2012
சென்னை : தானே புயல் காரணமாக சென்னை துறைமுகம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த தென்கொரிய நாட்டிற்கு சொந்தமான எம்வி ஒஎஸ்எம் அரேனாÕ என்ற சரக்கு கப்பல் மெரினா கடற்கரை அருகே கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் தரை தட்டி நின்றது. பின்னர் இது நேற்று முன்தினம் இழுவை கப்பல்கள் மூலம் 15 மீட்டர் ஆழத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

இந்த கப்பலின் நங்கூரம் செயல்படாததால், காற்றில் மெல்ல மெல்ல நகர்ந்து கரைக்கு வந்து விடுகிறது. இந்நிலையில், மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், சென்னை துறைமுகத்தலைவர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் நேற்று படகில் சென்று தரை தட்டிய கப்பலை பார்வையிட்டனர். பின்னர், ரோந்து செல்வதற்கு பயன்படும் அதிவேக படகினை ஜி.கே.வாசன் சிறிது தூரம் ஓட்டினார்.

அதன்பின், ஜி.கே.வாசன் அளித்த பேட்டி: அரேனா கப்பலில் நங்கூரத்தை இயக்கும் கருவியை சரிசெய்தபிறகு துறைமுகத்தின் எல்லைக்கு வெளியே கப்பல் நிறுத்தப்படும். அதில் பணியாற்றும் பர்மாவை சேர்ந்த 14 பேரும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி&கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும். 500 பேர் அமர்ந்து செல்லக்கூடிய சிறிய கப்பல் விடும் திட்டமும் உள்ளது. மெகா கன்டெய்னர் டெர்மினல் திட்டத்திற்கு மீண்டும் டெண்டர் விடப்படும். மதுரவாயல் உயர்மட்ட மேம்பால சாலை மற்றும் எண்ணூர்& மணலி விரைவு சாலை திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கப்பலை பார்க்க குவிந்த கூட்டம்

மெரினாவில் தரை தட்டி நிற்கும் அரேனா கப்பலை பார்க்க, தின மும் ஏராளமானோர் கடற்கரைக்கு வருகின்றனர். புத்தாண்டை கொண்டாட கடற்கரையில் குவிந்த ஏராளமானோர், அரேனா கப்பலை பார்த்து ரசித்தனர். கப்பலை புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment