Monday, January 2, 2012

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்யப்படவிருந்த ரூ.50 லட்சம் ஹெராயின் பறிமுதல்:கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது!

Monday, January 02, 2012
தூத்துக்குடி::தூத்துக்குடியில், கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்யப்படவிருந்த, 50 லட்ச ரூபாய் மதிப்பு, ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, பாலிடெக்னிக் மாணவர் உட்பட, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் போதைப்பொருள் விற்கப்படுவதாக, எஸ்.பி., ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது.அவரது உத்தரவுப்படி, தனிப்படை போலீசார் அது குறித்து ரகசிய விசாரணை நடத்தினர்.

காமராஜ் கல்லூரி பின்புறம் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற, தூத்துக்குடி அந்தோணி மைக்கேல் இன்னாசி(எ) சந்திரபோஸ்,51, யாசர் அராபத், விஜய்கரன்,21, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மதன்,19, ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர்.அவர்களிடமிருந்து, "ஹெராயின்' அரை கிலோ பறிமுதல்செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு, 50 லட்ச ரூபாய். விசாரணையில், இந்த ஹெராயினை அந்தோணி மைக்கேல் இன்னாசி, மர்மநபரிடம் இருந்து வாங்கி, இங்குள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்யவும், இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு கடத்திச் செல்லவும் திட்டமிட்டு, அவர் மற்ற மூவருடன் சேர்ந்து பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நால்வரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 2 பைக், 4 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

No comments:

Post a Comment