Friday, January 06, 2012இலங்கை::உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கனவே திட்டமிட்டவாறு நடைமுறைப்படுத்தப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து விசேட திட்டமொன்று ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டள்ளார்.
சகல தரப்பினருடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, அரசாங்கம் அவசர அவசரமாக அமுல்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக நாடு என்ற ரீதியில் பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவது வழமையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அரசாங்கத்திற்கு, அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினருடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment