Friday, January 6, 2012

400 புதுப்பட டிவிடி பறிமுதல் பர்மா பஜாரில் 2 பேர் கைது!

Friday, January 06, 2012
தண்டையார்பேட்டை:பர்மா பஜார் நடைபாதையில் விற்ற 400 புதுப்படம், 100 ஆபாச டிவிடிக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பாரிமுனை பர்மா பஜார் அருகே நடைபாதையில் புதுப்பட டிவிடி, ஆபாச டிவிடி விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. வடக்கு கடற்கரை இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று மாலை அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கூவிக்கூவி விற்பனை செய்த புதிய படங்களான ஒஸ்தி, மவுனகுரு, போராளி, ஏழாம் அறிவு டிவிடிக்கள் 400 மற்றும் ஆபாச டிவிடிக்கள் 100 பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை விற்ற தண்டையார்பேட்டையை சேர்ந்த முகமது (37), அம்பத்தூர் பாடியை சேர்ந்த சரவணன் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment