Friday, January 06, 2012இலங்கை::ஒரு தொகை தங்கம் மற்றும் பணத்தை வெளிநாட்டிற்கு கடத்த முயற்சித்த ஐந்து பேர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானநிலைய பாதுகாப்பு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய நபர்களை நோதனையிடும்போது ஒரு தொகை தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டதாக விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனையடுத்து ஏற்பட்ட சந்தேகத்தில் மேலும் நால்வரை சோதனையிட்டபோது அவர்களிடமிருந்தும் தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அக்குரணை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு இவர்கள் இந்தியாவிற்கு செல்ல தயாராகவிருந்ததாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment