Monday, January 02, 2012இலங்கை::அக்கரைப்பற்று பதூர்நகர் பிரதேசத்தில் வெற்றுக்காணி ஒன்றில் கிடந்த இரும்பிலான பந்து போன்ற மர்மப் பொருள் ஒன்றை இரு சிறுவர்கள் இன்று (02) பிற்பகல் இரும்பு பந்து என எறிந்து விளையாடிய போது அவ் மர்மப் பொருள் வெடித்து ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் உள்ள பதூர்நகர் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள இந்த சம்பவம் இடம்பெற்றதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
வெற்று காணியில் அனாதரவாக கிடந்த மர்மப் பொருள் ஒன்றை உறவினர்களான சகோதர சிறுவர்கள் எடுத்து மாறிமாறி எறிந்து விளையாடியபோது அது சூடாகி பாரிய சத்தத்துடன் தீடீரென வெடித்துள்ளது.
இவ்விபத்தில் பதூர்நகரைச் சேர்ந்த நிலாஸ் 12 வயது சிறுவன் உயிரிழந்ததுடன் அதே பிரதேசத்தைச் சேர்ந்த இக்கினாஸ் 16 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment