Monday, January 2, 2012

தமிழக அரசுக்கு நிதி ஞானதேசிகன் பேட்டி

Monday, January 02, 2012
சென்னை : தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சென்னையில் இன்று அளித்த பேட்டி: தமிழக மீனவர்களின் பிரச்னையை தீர்க்க தனி அதிகாரி நியமிக்கப்படுவார் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் கூறியுள்ளார். எனவே தமிழக மீனவர்களுக்கு பொங்கலுக்கு பிறகு நல்ல செய்தி வரும். இலங்கை ராணுவம் பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன். தமிழக அரசுக்கு வரும் நிதியை காங்கிரஸ் ஒருபோதும் தடுக்காது. தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க அதிக நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். நாளைமறுநாள் கடலூர் செல்கிறேன். அமைச்சர் ஜி.கே. வாசன், நாகை மற்றும் தஞ்சாவூருக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்...

தமிழக இலங்கை மீனவர்கள் 2 முறை சந்தித்து பேசி உள்ளனர்:பிரதமரிடமும் மீனவர் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன:தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்!

தமிழக இலங்கை மீனவர்கள் 2 முறை சந்தித்து பேசி உள்ளனர். பிரதமரிடமும் மீனவர் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தாண்டில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை இன்று சென்னையில் சந்தித்து உரையாற்றிய பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வழிதவறி செல்லும் மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிக்கப்படும்போது உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண தனி அதிகாரி நியமிக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன்.

எனது யோசனையை வெளியுறவு துறை செயலாளர் வரவேற்றுள்ளார். மீனவர் தரப்பில் கச்சத் தீவை மீட்க வேண்டும். அதுவரை குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கருத்தையும், பிரதமரிடம் தெரிவித்துள்ளேன்.

சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கும்படி இலங்கை தூதரகத்திடமும், மத்திய அரசிடமும் பேசியுள்ளேன். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்." இவ்வாறு அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment