Monday, January 2, 2012

யாழ். இளவாளை மார்ஷன் கூடல் பகுதியிலுள்ள பற்றைக் காட்டுக்குள் எறியப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!

Monday, January 02, 2012
இலங்கை::யாழ். இளவாளை மார்ஷன் கூடல் பகுதியிலுள்ள பற்றைக் காட்டுக்குள் இருந்து இறந்த நிலையில் சிசு ஒன்றின் சடலம் இன்று (02) திங்கட்கிழமை பகல் 1 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக இளவாளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் விறகு வெட்டச் சென்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிசு சிறிய பை ஒன்றில் பொதி செய்யப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளதாகவும் குறைமாதத்தில் பிறந்த சிசுவாக இது இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது சிசுவின் சடலம் இளவாளை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதா பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment