Monday, January 2, 2012

ஜே.வி.பி உறுப்பினர்களுடன் புதிய கட்சி உருவாக்கம் - புபுது!

Monday, January 02, 2012
இலங்கை::ஜே.வி.பியின் உறுப்பினர்களையும் இணைத்;துக்கொண்டு எதிர்காலத்தில் புதிய கட்சியொன்றை உருவாக்கப் போவதாக அந்த முன்னணியின் கிளர்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

ஜே.வி.பியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகித்த 9 உறுப்பினர்கள் நேற்று தெபரவௌயில் இடம்பெற்ற வருடாந்த மாநாட்டின் போது செயற்குழுவில் இருந்து அகற்றப்பட்டனர்.

அதன்பின்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கிளர்ச்சிக்குழுவின் ஊடகப் பேச்சாளர் புபுது ஜயகொடி கருத்து வெளியிட்டார்.

தாம் உட்பட ஜே.வி.பியின் மத்திய செயற்குழுவில் இருந்து விலக்கப்பட்ட 9 உறுப்பினர்களும் இணைந்து புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

தாம் கட்சியில் இருந்து விலக்கப்பட்டாலும், பெரும்பான்மை ஆதரவு தமக்கிருப்பதாக அவர் குறிப்பிட்டார்...

ம.வி.மு அரசியல் குழு, மத்திய செயற்குழு, அதிகாரிகள் குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் மீண்டும் நியமனம்!

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு, மத்திய செயற்குழு மற்றும் அதிகாரிகள் குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெபரவெவயில் நேற்று நடைபெற்ற அந்தக் கட்சியின் விசேட மாநாட்டின் போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பிரகாரம் மக்கள் விடுதலை முன்னணியின் புதிய அரசியல் குழுவில் சோமவங்ச அமரசிங்க, ரில்வின் சில்வா, அனுர திசாநாயக்க, விஜித்த ஹேரத், கே.டி.லால்காந்த் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

கட்சியின் தலைவர் மற்றும் வெளிவிவகார செயலாளராக சோமவங்ச அமரசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டதுடன், பிரதம செயலாளராகவும் கல்வி செயலாளராகவும் ரில்வின் சில்வா பதவி வகிக்கவுள்ளார்.

அனுரகுமார திசாநாயக்க நிதிச் செயலாளராகவும், கே.டி.லால்காந்த நிருவாக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment