Monday, January 2, 2012

மட்டு: பொலிஸார் சத்தியபிரமாணம் செய்து புதுவருடத்தில் கடமைகளை பொறுப்பேற்றனர்:கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணம்!

Monday, January 02, 2012
இலங்கை::பிறந்துள்ள 2012 புதுவருடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் செய்து தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன் தலைமையில் பதவியேற்பு உறுதியுரை இடம்பெற்றது.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உறுதியுரைகள் இடம்பெற்றன. மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பொலிஸ் உயரதிகாரிகள் உட்பட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் கடமைபுரியும் உத்திகோத்தர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை::கல்முனை மாநகர சபையில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் அரச நியதிக்கமைய இன்று காலை ஒன்பது மணிக்கு மாநகர ஆணையாளர் ஜே.எம்.லியாகத் அலி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்தனர்.

No comments:

Post a Comment