Saturday, January 28, 2012இலங்கை::காவல்துறையில் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் புலிபோராளிகளுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
உரிய கல்வித்தகமைகள் மற்றும் ஏனைய தகுதிகளைக் கொண்டவர்கள்காவல்துறைத் திணைக்களத்தில் இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு அளிக்க்பபட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட முன்னாள் புலிகளுக்கு அரசாங்கம் இந்த அழைப்பை விடுத்துள்ளது.
காவல்துறையில் இணைந்து சேவையாற்ற விரும்பும் முன்னாள் புலி போராளிகளுக்கு அதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தனராஜகுரு தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் புலிபோராளிகளைஉதாசீனம் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய தகமைகளும், விருப்பமும் உடைய முன்னாள் புலிபோராளிகள்காவல்துறையில் இணைந்து கொள்ளத் தடையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment