Monday, January 02, 2012இலங்கை::நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரத்தில் ஆளும் கட்சியின் அங்கத்துவ கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி. உட்பட கட்சிகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கடந்த வாரத்தில் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டிருந்ததையடுத்தே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் சபை அமர்வுக்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆளும் கட்சியின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் விருப்பம் கொண்டுள்ளதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளர்.
இதேவேளை, சர்வதேசத்தின் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன்னாள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கம்யூனிஸக் கட்சியின் சார்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டி.யூ குணசேகர வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment