Monday, January 2, 2012

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் சென்னை வந்தார்!

Monday, January 02, 2012
சென்னை: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் இன்று காலை சென்னை வந்தார். ஆந்திரா வந்துள்ள ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம், இன்று காலை 11.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை வந்த ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சென்னை மேயர் சைதை துரைசாமி வரவேற்றார்

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் 11.25க்கு சென்னையில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார். அங்குள்ள ராக்கெட் ஏவுதளத்தைப் பார்வையிடுகிறார். பின்னர், விஞ்ஞானிகளை சந்தித்துப் பேசுகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் மாலை 5.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர், அங்கிருந்து 5.25க்கு தனி விமானத்தில் ஆந்திரா செல்கிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று மாலை 4.30 மணிக்கு நடந்தது.

No comments:

Post a Comment