Wednesday, January 11, 2012

கனடாவில் புலிகளின் முத்திரை சட்டபூர்வமானதல்ல-தீபா சொப்ரால்!

Wednesday,January,11,2012 12
இலங்கை::புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் மற்றும் புலிகளின் இலட்சினையுடன் கனடாவில் வெளியிடப்பட்டுள்ள முத்திரைகள் தமது நிறுவனத்தால் வெளியிடப்பட்டவை அல்ல என்று கனேடிய தபால் திணைக்களத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தீபா சொப்ரால் அறிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வரவுக்கு கனேடிய தபால் திணைக்களத் தலைவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். புலம்பெயர்(புலிகளின்) தமிழர் அமைப்பே இந்த முத்திரையை வெளியிட்டுள்ளது. இந்த முத்திரை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்துவதற்கு உரியதல்ல. கனேடிய தபால் திணைகக்ளத்தின் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு இந்த முத்திரை பயன்படுத்தப்படுவது இல்லை. உத்தியோகபூர்வ பணிகளுக்கு இந்த முத்திரையைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. முத்திரைகளை வெளியிடுவதற்கான அங்கீகாரம் சட்டபூர்வமான பணிப்பாளர் சபையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானத்துக்கு அமைய வழங்கப்படும். என்றும் அவர் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வரவுக்குத் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment