Wednesday,January,11,2012 12திண்டுக்கல்:தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவரான பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டதால் தென்மாவட்டங்களில் பதற்றம் நிலவுகிறது. பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். பஸ்கள் உடைக்கப்பட்டன. பரமக்குடி அருகே ரயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. போக்குவரத்து முடங்கியதால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அலங்காரதட்டு கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி பாண்டியன் (52). தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவரான இவர் மீது பல கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதனால், இவரது உயிருக்கு ஆபத்து இருந்தது. எதிரிகள் இவரை கொல்ல பலமுறை முயற்சி செய்தனர். இதையடுத்து பசுபதி பாண்டியனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. 6 மாதங்களுக்கு முன்பு திடீரென இவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக வீட்டை மாற்றினார் பசுபதி பாண்டியன். 12 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி இ.பி. காலனிக்கு குடிபெயர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி ஜெசிந்தா, கொடூரமாக கொல்லப்பட்டார். அதன்பிறகு அம்மா, மகள், மகனுடன் திண்டுக்கல்லிலேயே பசுபதி பாண்டியன் வசித்து வந்தார். தனக்கு நெருக்கமான சுமார் 10 பேரை பாதுகாப்புக்காக எப்போதும் உடன் வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணிக்கு பாதுகாப்புக்கு இருந்தவர்கள் அனைவரும் சாப்பிட சென்றனர். அப்போது தனியாக இருந்த பசுபதி பாண்டியனை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2 தனிப்படைகள் தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு விரைந்துள்ளன. மூன்றாவது தனிப்படை திண்டுக்கல்லில் கொலையாளிகளை தேடி வருகிறது. கொலையாளிகளில் ஒருவர் சைக்கிளில் வந்ததாகவும் மற்ற 2 பேர் நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கொலை நடப்பதற்கு முன்பு மர்ம நபர் ஒருவர் அப்பகுதியில் நீண்ட நேரமாக நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். பசுபதி பாண்டியன் வீட்டின் அருகே அனாதையாக கிடந்த புதிய சைக்கிளை போலீசார் கைப்பற்றினர். அதில், உமா சைக்கிள் மார்ட், பெரியார் சிலை அருகில், திண்டுக்கல் என்ற முகவரி இருந்தது. இதனால், பசுபதிபாண்டியனை கொலை செய்ய வசதியாக சைக்கிளை கொலையாளிகள் வாடகைக்கு எடுத்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொலையாளிகள் திண்டுக்கல்லில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நகரில் உள்ள லாட்ஜ்கள், பண்ணை வீடுகளில் போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர்.
இதற்கிடையே, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பசுபதி பாண்டியன் உடல் இன்று காலை 8 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது அம்மா வேலம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனை முன்பு திண்டுக்கல் எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பசுபதி பாண்டியன் உடல் அரசு மருத்துவமனையில் இருந்து பெரியார் சிலை, நாகல் நகர் ரவுண்டானா, பேகம்பூர் வரை சுமார் 2 கி.மீ. தூரம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் சொந்த ஊரான அலங்காரத்தட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவரான பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டதால் தென்மாவட்டங்களில் பதற்றம் நிலவுகிறது. பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். பஸ்கள் உடைக்கப்பட்டன. பரமக்குடி அருகே ரயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. போக்குவரத்து முடங்கியதால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அலங்காரதட்டு கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி பாண்டியன் (52). தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவரான இவர் மீது பல கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதனால், இவரது உயிருக்கு ஆபத்து இருந்தது. எதிரிகள் இவரை கொல்ல பலமுறை முயற்சி செய்தனர். இதையடுத்து பசுபதி பாண்டியனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. 6 மாதங்களுக்கு முன்பு திடீரென இவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக வீட்டை மாற்றினார் பசுபதி பாண்டியன். 12 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி இ.பி. காலனிக்கு குடிபெயர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி ஜெசிந்தா, கொடூரமாக கொல்லப்பட்டார். அதன்பிறகு அம்மா, மகள், மகனுடன் திண்டுக்கல்லிலேயே பசுபதி பாண்டியன் வசித்து வந்தார். தனக்கு நெருக்கமான சுமார் 10 பேரை பாதுகாப்புக்காக எப்போதும் உடன் வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணிக்கு பாதுகாப்புக்கு இருந்தவர்கள் அனைவரும் சாப்பிட சென்றனர். அப்போது தனியாக இருந்த பசுபதி பாண்டியனை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2 தனிப்படைகள் தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு விரைந்துள்ளன. மூன்றாவது தனிப்படை திண்டுக்கல்லில் கொலையாளிகளை தேடி வருகிறது.
கொலையாளிகளில் ஒருவர் சைக்கிளில் வந்ததாகவும் மற்ற 2 பேர் நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கொலை நடப்பதற்கு முன்பு மர்ம நபர் ஒருவர் அப்பகுதியில் நீண்ட நேரமாக நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். பசுபதி பாண்டியன் வீட்டின் அருகே அனாதையாக கிடந்த புதிய சைக்கிளை போலீசார் கைப்பற்றினர். அதில், உமா சைக்கிள் மார்ட், பெரியார் சிலை அருகில், திண்டுக்கல் என்ற முகவரி இருந்தது. இதனால், பசுபதிபாண்டியனை கொலை செய்ய வசதியாக சைக்கிளை கொலையாளிகள் வாடகைக்கு எடுத்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொலையாளிகள் திண்டுக்கல்லில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நகரில் உள்ள லாட்ஜ்கள், பண்ணை வீடுகளில் போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர்.
இதற்கிடையே, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பசுபதி பாண்டியன் உடல் இன்று காலை 8 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது அம்மா வேலம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனை முன்பு திண்டுக்கல் எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பசுபதி பாண்டியன் உடல் அரசு மருத்துவமனையில் இருந்து பெரியார் சிலை, நாகல் நகர் ரவுண்டானா, பேகம்பூர் வரை சுமார் 2 கி.மீ. தூரம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் சொந்த ஊரான அலங்காரத்தட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று
மாலை இறுதிச் சடங்கு நடக்கிறது.
பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் தென்மாவட்டங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தின் பல இடங்களில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் பஸ்கள் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் 15க்கும் அதிகமான பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. இதையடுத்து பல பகுதிகளில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பாசஞ்சர் ரயில், நள்ளிரவு 1.37 மணியளவில் பரமக்குடி ரயில் நிலையம் வந்தது. ரயிலின் கடைசி பெட்டியில் பொன்னையாபுரம் பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். பெட்ரோல் குண்டு விழுந்து வெடித்ததில் பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது. ஸ்டேஷனில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். அரை மணி நேரத்துக்கு பிறகு ரயில் புறப்பட்டு சென்றது. இதையடுத்து பரமக்குடி ஸ்டேஷனில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த முருகன்பட்டி அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர். நாங்குனேரியை அடுத்த விஜயநாராயணபுரம் அருகே பெட்டிக்கடை மற்றும் மட்டன், சிக்கன் ஸ்டாலை ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது. பரப்பாடி பகுதியில் மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி வைத்துள்ளனர். வேதாரண்யம் அருகே ஆதனூர் ஆப்பகண்ணுபாலம் அருகே நேற்றிரவு ஒரு கும்பல், அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியது. வேதாரண்யம் டிஎஸ்பி ஆபீஸ் முன்பு வந்து கொண்டிருந்த அரசு பஸ்சையும் சிலர் அடித்து நொறுக்கினர். கண்டக்டரை அரிவாளால் வெட்டினர். திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பஸ்கள் இயங்காததால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
மனைவி படுகொலை
கடந்த 2006ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே காரில் மனைவியுடன் சென்ற பசுபதி பாண்டியனை லாரி ஏற்றியும் வெடிகுண்டு வீசியும் கொலை செய்ய ஒரு தரப்பினர் முயன்றனர். அதில் பசுபதி பாண்டியன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது மனைவி ஜெசிந்தா கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று பசுபதி பாண்டியனும் கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலை பார்த்து அவரது மகள் பிரியங்கா, மகன் இருவரும் ‘நாங்கள் அனாதையாகி விட்டோம்’ என்று கூறி கதறி அழுதனர்.
No comments:
Post a Comment