Wednesday, January 11, 2012

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெயலலிதா!

Wednesday,January,11,2012 12
சென்னை::தமிழகத்தில் புதிய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினால் 1.34 கோடி குடும்பங்கள் பயன்பெறுவார்கள். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளவும், மற்ற விவரங்களை அறியவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென்று தனியாக மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திட்டத்தின்
விவரங்கள் மற்றும் உதவி பெற 24 மணி நேர கட்டணம் இல்லா தொலைபேசி சேவையான 18004253993 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வீதம், 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சைகள், 113 தொடர் சிகிச்சைகள் மற்றும் 23 நோய் அறிதல் கண்டுப்பிடிப்பு சிகிச்சைகள் அனுமதிக்கப்படுகிறது. நோயாளிகளின் சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகள், காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்தில் செலவழிக்கப்பட்டகட்டணத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டு தொகை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்குவது போலவே, அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும். இதன் மூலம், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை மேம்படுத்தப்படும்.

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச கன்று : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு!

சென்னை: தானே புயலால் கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தானே புயலால் தோட்டப் பயிர்கள் அழிந்து நாசமாயின. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாயினர். புயல் மற்றும் மழையால் தோட்டப்பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு இலவசமாக பலா,முந்திரி,‌தென்னை கன்றுகள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கன்றுகளை பாராமரிக்க ஆகும் செலவை ஓராண்டுக்கு அரசே ஏற்கும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

விவசாய தொழிலாளர்களுக்கான செலவு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நெல் மற்றும் எண்ணெய் வித்துக்களை இழந்த விவசாயிகளுக்கு இலவசமாக விதை மற்றும் உரம் வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மேலும் நில மேம்பாடு, குழி எடுத்தலுக்குரிய செலவையும் அரசே தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை பயிரிட விதை மற்றும் உரம் இலவசமாக வழங்கப்படும் எனவும், பயிர் பாதுகாப்பு மருந்துகளும் ஓராண்டுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment