Wednesday, January 11, 2012

அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதன் மூலம் மாத்திரமே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்-டி.யு.குணசேகர!

Wednesday,January,11,2012 12
இலங்கை::அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதன் மூலம் மாத்திரமே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என இலங்கை கம்யூனிச கட்சி வலியுறுத்தியுள்ளது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை மூலம் நாட்டில் சாந்தி, சமாதானம், ஒன்றுமை, இணக்கப்பாடு என்பவற்றை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என இலங்கை கம்யூனிச கட்சியின் பிரதான செயலாளர், சிரேஸ்ட அமைச்சர் டி.யு.குணசேகர தெரிவித்துள்ளார்.

ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பம் பாரிய சவால் மிக்கதாக இருந்தாலும் சவாலை வெற்றிகொள்ள அனைத்து கட்சிகளும் செயற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஈழம் என்ற பதத்தை தூக்கிப் பிடித்துள்ள சில புலம்பெயர் மக்களும் மேற்குலக சக்திகளும் இலங்கையில் மேலும் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக டி.யு.குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை சுயாதீனமாக உணர்ந்து, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கொண்டு அனைத்து கட்சிகளும் செயற்பட வேண்டும் என சிரேஸ்ட அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment