Thursday, January 5, 2012

பாதாள குழுவினரை சுட்டுக் கொலை செய்வதை விடுத்து, அவர்களை கைதுசெய்து புனர்வாழ்வளிக்க வேண்டும்-அமைச்ர் விமல் வீரவன்ஸ!

Thursday,January 05, 2012
இலங்கை::வறுமையின் காரணமாகவே பாதாள உலகத்தினர் உருவாகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சேரிப்புறங்களிலேயே உள்ளனர். இவ்வாறான குற்றவாளிகளை சுட்டுக் கொலை செய்வதை விடுத்து, அவர்களை கைதுசெய்து புனர்வாழ்வளித்து கத்தில் சாதாரண பிரஜைகளாக மாற்றியமைப்பதையே பொலிஸார் மேற்கொள்ள வேண்டுமென்று அமைச்ர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார் என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் விமல் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெவித்துள்ளதாவது பாதாள உலகக்கோஷ்டியில் உள்ளவர்களது பின்புலத்தை நாம் பார்க்கும்போது அவர்கள் சிறுபராயத்திலேயே தாம் வாழும் பிரதேசத்தில் மிகவும் வறுமைக்-கோட்டில் வாழ்ந்துவருபவர்களாக உள்ளனர். இவர்கள் தமது சிறுபராயத்திலேயே குற்றச்யெல்களிலும் நாசகார வேலைகளிலும் ஈடுபடத்தொடங்குகின்றனர்.

இவர்கள் தமது பொருளாதார நெருக்கடிகளினால்தான் சில குற்றச்யெல்களில் ஈடுபடுகின்றனர். அத்தோடு , சில அரசியல்வாதிகளுக்கு அடிவருடிகளாக யெற்படுதல் போன்ற விடயங்களில் ஈடுபட்டு பாதாள உல-கக்கோஷ்டியாக மாறி இந்த நாட்டில் பாரதூரமான குற்றச்யெல்களில் ஈடுபடுகின்றனர். இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தமது ஏழ்மை காரணமாகவும் சில சட்டவிரோதச் யெல்களில் ஈடுபட்டு தமது பிரதேசத்தில் சண்டியன்களாகப் பிரபல்யமடைந்து மறைந்து வாழப்பழகுகின்றனர்.

அத்துடன், தாம் செய்யும் குற்றச்யெல்களின் மூலம் கிடைக்கும் பணத்தைவைத்து ஆடம்-பர வாழ்க்கை வாழப் பழகிக்கொள்கின்றனர். இவர்களையும் நாம் புனர்வாழ்வளித்து அவர்களது புறச்சூழலை படிப்படியாக மாற்றுதல் வே ண்டும். அதற்கான திட்டமொன்றை அரசு முன்னெடுக்கவேண்டும் என்று தெரிவித்தார் என்று தெரிவிக்கபடுகிறது.

அநுராதபுரம் திறப்பனையில் நேற்று வீடமைப் புத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெவித்துள்ளார். இவ் வைபவத்-தில் பிரதியமைச்சர்கள் துமிந்த திசநாயக்க, வீரக்குமார திசாநாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் போட்டி பிரமலால் திசாநாயக்க, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஜெயந்த சமரவீர ஆகியோரும் கலந்துகொண்துள்ளனர் .

No comments:

Post a Comment