Thursday, January 5, 2012

எம்ஜிஆரின் 95வது பிறந்த நாள் விழா அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு!

Thursday,January 05, 2012
சென்னை : எம்ஜிஆரின் 95வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில், வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக தலைவர் எம்ஜிஆரின் 95ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை உள்ள மூன்று நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் பகுதிகளிலும், அதிமுக அமைப்புகள் செயல்படும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, கட்ச¤யின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17ம் தேதியன்று ஆங்காங்கே எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இளைஞர்கள், மாணவர்கள் தொழில் திறன் வளர்க்க க்ஷீ20 கோடி ஒதுக்கீடு:ஜெயலலிதா உத்தரவு!

சென்னை : தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொழில் திறன் பயிற்சி அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 15 ஆயிரம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க 6 கோடி ரூபாயும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 25 ஆயிரம் மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி வழங்க 7 கோடியே 50 லட்சம் ரூபாயும், பயிற்றுநர்களுக்கான பயிற்சி திட்டத்துக்கு 50 லட்சம் ரூபாயும் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
விமான பராமரிப்பு, உற்பத்தி சார்ந்த துறை, கப்பல் துறை மற்றும் அதுசார்ந்த சேவை பிரிவுகளில் இளைஞர்களை பயிற்றுவிக்க தனியாருடன் இணைந்து உலக தரம் வாய்ந்த பயிற்சி மையம் அமைக்க 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களின் அறிவுத் திறன் மேம்பட மின்னணு பாட முறை மற்றும் பணி சூழலின் மாதிரி அடிப்படையிலான பயிற்சியை அறிமுகப்படுத்த 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இருந்து தேர்ச்சி பெற்று வெளிவரும் மாணவர்களுக்கும், குறுகிய கால தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் அரசு முத்திரையுடன் கூடிய திறன் அடையாள அட்டை வழங்க ரூ.25 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. பயிற்றுநர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் ஒன்றை உருவாக்க 25 லட்சம் ரூபாயும், தொழில் திறன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்கவும், பராமரிக்கவும் தமிழ்நாடு மாநில திறன் பதிவு தொகுப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு 15 லட்சம் ரூபாயும் அனுமதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிக்காக 1 கோடியே 93 லட்சம் ரூபாயும், மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணி யாளர்க ளின் ஊதியம், இத்திட்டத்துக்கான ஆலோசகரின் ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளுக்காக 2 கோடியே 17 லட்சம் ரூபாயும், திட்டத்தை விளம்பரப்படுத்த, கூட்டங்கள் நடத்த, மனிதவள தேவையை கண்டறிய 70 லட்சம் ரூபாயும் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டங்களுக்காக மொத்தம் 20 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடத்தப்படும் மாநில திறனாய்வு போட்டிகளில் சிறந்த பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுபவருக்கான பரிசுத் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி தொடரும் முன்னாள் குழந்தை தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதியுதவி 250 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி படிப்பு காலம் முழுவதும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 317 பேர் பயன் அடைவர். அரசுக்கு 19 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment