Tuesday, January 31, 2012

தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வாக்கு சரிவதை அவதானிக்கமுடிகின்றது- டி.எம்.சந்திரபால!

Tuesday, January 31, 2012
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோட்டைகளாக விளங்கிய பல கிராமங்களில் தமிழ் மக்கள் அக்கட்சியை விட்டு விலகி சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துள்ளனர்.

இதிலிருந்து கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வாக்கு பாரியளவில் சரிவதுடன் எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்து விடுவார்கள் எனபது விளங்குகின்றது. இவ்வாறு சிறீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.

மட்டக்களப்பு தம்பானம்வெளி கிராமத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை புதிய சிறீலங்கா சுதந்திரகட்சி கிளையை திறந்’து வைத்து பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அமைப்பாளர் பேசுகையில் நீண்டகால யுத்தம் முழுமையாக நிறைவுபெற்றுள்ளது. மக்கள் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர். இப்போது மக்களுக்குத்தேவை அபிவிருத்தியுடன் கூடிய நிம்மதிமிக்க வாழ்க்கைதான் அவற்றை செய்யவேண்டுமானால் ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும்.

சரத்பொன்சேகாவை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி ஜனாதிபதியாக்க முனைந்த லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமே இன்று ஜனாதிபதி அவர்களின கரங்களை பலப்படுத்தி அரசாங்கத்தில் அமைச்சராகவுள்ளளர். ஆனால் இன்னும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வீரம்பேசிக்கொண்டு எதிர்தரப்பிலேயே அமர்ந்துள்ளனர்.

அழிந்துபோன எமது மண்ணைக்கட்டியெழுப்ப ஆழும் அரசுக்கு ஒத்துழைப்பை வழங்குகுவதை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லமுனைவதால் தான் தமிழ் மக்கள் அக்கட்சியிலிருந்து விலகி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment