Monday, January 02, 2012இலங்கை::புலிகளின் மகளிர் அணி அரசியல் பிரிவின் தலைவியான தமிழினி என அழைக்கப்படும் சுப்ரமணியம் சிவகாமியின் விளக்கமறியல் எதிர்வருத் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் ரஷ்மி சிங்கப்புலி இன்று (02) பிறப்பித்தார். தமிழினி மீது மேற்கொள்ளப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று குற்றத்தடுப்புப் பொலிஸர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியதனையடுத்தே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி குற்றத்தடுப்புப் பிரிவினால் தமிழினி கைது செய்யப்பட்டிருந்தார்.
நாவற்குளம் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பெண் விளக்கமறியலில்!
நொச்சியாகம நாவற்குளம் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பெண் ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரின் மனைவி, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நாவற்குளம் பகுதியில் இருவரைக் கொலை செய்து அவர்களின் சடலங்களை வடிகானுக்குள் போட்டதாக சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய வேறு நபர்கள் இருப்பின், அவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு தம்புத்தேகம நீதவான் சாமர கெக்கிரிதெனிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment