Monday, January 02, 2012இலங்கை::யாழ்ப்பாண மாவட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த 44 லட்சத்திற்கும் அதிகமான கண்ணிவெடிகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த 101 லட்சத்திற்கும் அதிகமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற 2011 ம் ஆண்டுக்கான இறுதி அபிவிருத்தி மற்றும் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, வடமாகாண ஆளுநர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்..
இதனிடையே, யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 ஆயிரத்து 170 குடும்பங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 442 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு காரணங்கள் மற்றும் கண்ணிவெடியகற்றப்படாமல் இருக்கும் பிரதேசங்களில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பிரிவு பிரதானிகளுடனான கலந்துரையாடல்களின் பின்னர் மீள்குடியேற்றம் முன்னெடுக்கப்படும் என மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment