Monday, January 02, 2012ரஜினி வாழ்வில் வரும் மே மாதம் 12ம் தேதிக்கு பிறகு மாற்றம் ஏற்படும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு திரையுலகில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது. இந்த ஆண்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்திருக்கின்றனர். ‘பொதுவாக பார்க்கும்போது நடிகர், நடிகைகளின் வாழ்க்கை மேம்பட்டிருக்கும். தமிழ் சினிமா உலகம் ஒரு புதிய பரிமாணத்தை அடையும்’ என்று தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ரஜினிக்கு இன்னல் தரும் ஆண்டாக அமைந்தது.
அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் ‘ராணா’ படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு அவருக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். ‘கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரஜினிக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மே 12ம் தேதி அவரது வாழ்வில் புதிய மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்துக்கு பிறகு அவரது புகழ் ஓங்கும்’ என்று கணித்திருக்கின்றனர். கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் பற்றி கூறும்போது,‘வரும் செப்டம்பர் மாதத்துக்கு பிறகு அவர் பெரிய அளவில் பிரபலம் அடைவார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவரது வாழ்வில் மாற்றம் ஏற்படும். தன்னுடைய தொழிலை அவர் மாற்றக்கூடும்’ என்றனர்.
அனுஷ்கா கால்ஷீட் கிடைக்கவில்லை அஜீத்துக்கு ஹீரோயின் தேடும் இயக்குனர்!

அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா கால்ஷீட் கிடைக்காததால் வேறு ஹீரோயினை தேடுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். ‘பில்லா 2’ படத்தில் அஜீத் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால் வேறு படங்களில் அவர் பிஸியாக இருப்பதால் அஜீத் படத்துக்கு கால்ஷீட் தர இயலவில்லை. இதையடுத்து பிரபல நடிகைகளிடம் கால்ஷீட் பற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர்.
‘பில்லா’ முதல்பாகத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். ‘பில்லா 2’ படத்தையும் அவரே இயக்குவதாக இருந்தது. ஆனால் தெலுங்கு படத்தை இயக்க சென்றுவிட்டதால் அந்த வாய்ப்பு கைநழுவியது. தற்போது சக்ரி டுலிட்டி இப்படத்தை இயக்கி வருகிறார். அஜீத், விஷ்ணுவர்தன் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் 2 மாதங்களுக்கு பிறகு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ‘சிறுத்தை’ ஷிவா இயக்கும் மற்றொரு படத்திலும் அஜீத் நடிக்கிறார்.
சில்க் வேடத்தில் கலக்கிய வித்யாபாலனுக்கு விருது!

சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து கலக்கிய வித்யாபாலனுக்கு தனியார் அமைப்பு ஒன்று சிறந்த நடிகை விருது வழங்க தேர்வு செய்துள்ளது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து டர்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் படமானது.
ஏக்தா கபூர் தயாரித்த இந்தப் படம், பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியானது.
சில்க் ஸ்மிதாவின் அண்ணன் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நடிகர் வினுச் சக்கரவர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். சில்க்ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்த வித்யாபாலன் மீதும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இந்தியா முழுவதும் இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.
தற்போது இதில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். படத்துக்கும் சிறந்த படத்துக்கான விருது கிடைக்கிறது. நேஷனல் மீடியா நெட்வொர்க் அமைப்பு வருகிற 21-ந்தேதி நடத்தும் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment