Sunday, January, 01,2012இலங்கை::வடபகுதி கடலில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 6 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கோரிக்கைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இந்த குழுவினர் மீட்கப்ட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் கொமாணடர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இந்த மீனவர்கள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்கப்பதற்காக அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டார்.
காணாமற்போன இந்திய மீனவர்கள் கண்டுபிடிப்பதற்காக இலங்கை மீனவர்களை கடற்படையினர் நேற்றைய தினம் இந்த தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment