Sunday, January, 01,2012டெஹ்ரான்:அணுசக்தி திட்டங்கள் குறித்து, ஐரோப்பிய யூனியன் தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. அணுசக்தி திட்டங்கள் என்ற பெயரில் பயங்கர அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்து வந்தது. மேலும், சர்வதேச அணுசக்தி கழகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் ஈரானில் ஆய்வு நடத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து, ஈரான் மீது தேவைப்பட்டால் போர் நடவடிக்கையும் எடுப்போம் என்று அமெரிக்கா மிரட்டியது. எனினும், அணுசக்தி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று ஈரான் கூறியது.
இந்நிலையில், ஈரான் மீது ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. பரபரப்பான சூழ்நிலையில்,அணுசக்தி திட்டங்கள் குறித்து ஐரோப்பிய யூனியன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சு நடத்த தயார். ஆனால், அந்த பேச்சு இருதரப்பு ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் என்று ஈரான் சமரச பேச்சு பிரதிநிதி சயீத் ஜலில் கூறினார். டெஹ்ரானில் பலநாட்டு தூதர்களின் சந்திப்புக்கு பிறகு இதை அவர் அறிவித்தார். இதுகுறித்து ஜெர்மனிக்கான ஈரான் தூதர் அலிரெசா ஷேக் அட்டார் கூறுகையில், பேச்சு நடத்த தயார் என்பது குறித்து விரைவில் கடிதம் அனுப்புவோம் என்றார்.
No comments:
Post a Comment