Friday, January 06, 2012இலங்கை::இணையத்தளங் களை பதிவு செய் யும் வேலைத்திட் டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள 41இணையத்தளங் களுக்கு அடுத்த வாரத்தில் பதிவுச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஊட கத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான தகைமைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவினால் அனுமதிக்கப்பட்ட 41 இணையத்தளங்களுக்கு இவ்வாறு பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டப்ளியூ.பீ. கணேகல தெரிவித்தார்.
பதிவு செய்யப்படுகின்ற இணையத்தள ங்கள் பற்றிய தகவல்கள், அதன் உரிமையாளர்கள், அதில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் பொது மக்கள் அறிந்து கொள்வதற்காக ஊடகங்கள் மூலம் வெளியிட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான தகைமைகளை ஆராய்வதற்கான குழுவில் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஒருவரும் தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதுடன், பதிவு செய்து கொள்வதற்காக விண்ணப்பித்த 80 இணையத்தளங்களில் 61 இணையத்தளங்கள் நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
டிசெம்பர் மாதம் 23 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைகளில் கலந்து கொண்ட 61 இணையத்தளங்களில் 20 பதிவு செய்வதற்கு தகைமை அற்றவையென மேற்படி குழு தீர்மானித்துள்ளதாகவும், அதன்படி மீதமுள்ள 41 இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கணேகல சுட்டிக்காட்டினார்.
நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய இணையத்தளங்களை உரிய நேரத்திலேயே பரீட்சித்ததாகவும் எனவே அதன் போது உண்மைக்குப்புறம்பான செய்திகளை வெளியிட்டிருந்த இணையத்தளங்கள் அதன் மூலம் இனங்காணப்பட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அவ்வாறான போலியான தகவல் களை திருத்திக்கொண்டு வருமாறு சில இணையத்தளங்களுக்கு அறிவித் துள்ளதாகவும், இதற்காக கால எல்லை இல்லையெனவும் எச்சந்த ர்ப்பத்திலும் தகைமைகளை பரீட்சித் ததன் பின்னர் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊடகத்துறை அமைச்சின் செயலா ளர் கூறினார்.
இதுவரையில் பதிவு செய்து கொள்ளாத இணையத்தளங்களுக்கு பதிவு செய்துகொள்ள விண்ணப்பிக் குமாறு வேண்டுகோள் விடுத்த கணேகல ஒழுக்க நெறிக் கோவை ஒன்றின் பிரகாரம் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
போலியான தகவல்களை வெளியிட்டு நபர்களை கஷ்டத்திற்கு உட்படுத்தும் இணையத் தளங்களை தடை செய்வதற்காகவே மேற்படி பதிவு நடவடிக்கையினை அமைச்சு ஆரம்பித்துள்ளது.
அதற்கு எதிராக ஒரு இணையத்தளம் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் அமைச்சின் பணியினை முன்னெடுத்துச் செல்லுமாறு உத்தரவு கிடைக்கப் பெற்றள்ளது.
பதிவுக்கு எதிராக மேலும் 5 இணையத்தளங்கள் மேலும் முறைப்பாடு செய்துள்ளதுடன், அதற்கான தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் அமைச்சு எதிர்பார்த்திருப்பதாகவும் கணேகல மேலும் கூறினார்.
No comments:
Post a Comment