Friday, January 6, 2012

தங்காலை ஹோட்டல் ஒன்றில் பிரித்தானியர் ஒருவர் டிசம்பர் 25ம் திகதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர்!

Friday, January 06, 2012
இலங்கை::தங்காலை ஹோட்டல் ஒன்றில் பிரித்தானியர் ஒருவர் டிசம்பர் 25ம் திகதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான குற்றவாளிகளை இனம் காணும் அடையாள அணிவகுப்பு நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றவாளிகளை அடையாளம் காணும் இவ் அணிவகுப்பு தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிரித்தானிய பிரஜையுடன் இருந்த ரஷ்ய நாட்டு பெண்ணை தவிர ஏனைய 13 சாட்சியாளர்களும் 5 சந்தேக நபர்களையும் இனங்காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்து பேரில் தங்காலை பிரதேசசபைத் தலைவர் சம்பத் விதான பத்திரனவும் அடங்குகிறார்.

கிறிஸ்மஸ் தினத்தன்று இடம்பெற்ற இப் படுகொலை சம்பவத்தின் போது, அவருடன் இருந்த ரஷ்ய பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment