Friday, January 6, 2012

வீட்டின் குளிய லறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுமி பலி!

Friday, January 06, 2012
இலங்கை::வீட்டின் குளிய லறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுமி மிகவும் பரிதாபகரமான முறையில் உயி ரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் கேகாலை, கலிகமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தி யட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

வீட்டின் குளியலறை சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. அந்த இடிப்பாடுகளுக்குள் சிக்கிய சிறுமியை மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு அனுமதித்தப் பின்னரே சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளது.

இடிந்து விழுந்த சுவரின் பாகங்கள் சிறுமியின் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயத்தை ஏற்படுத்தியதிலேயே சிறுமி உயிரிழந்துள்ளமை மரண விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment