நேற்றுறைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் விடுதியில் வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள்: மாவை சேனாதிராஜாவினால் வெளியே அனுப்பபட்டமை தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினது முரண்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் யாழ் மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புகள் சீற்றம் கொண்டிருக்கின்றன!
Wednesday,December,14,2011இலங்கை::தமிழ்த் தேசிய கூட்டமைப்பினது முரண்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் யாழ் மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புகள் சீற்றம் கொண்டிருக்கின்றன. நேற்றுறைய தினம் தமது நிலைப்பாடு தொடர்பாக சிவில் அமைப்புகள் ஒன்று கூடி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜாவிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினது தலைமையினால் தன்னிச்சையாக எடுக்கப்படுகின்ற பல்வேறு முடிவுகள் , இலங்கை அரசுடனான பேச்சுக்கள் மற்றும் கைவிடப்பட்ட பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கேள்வி எழுப்பியுள்ளன.
நேற்றுறைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. மாவை சோதிராஜாவும் கலந்து கொண்டிருந்தார். உடனும் அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் மாவை சேனாதிராஜாவினால் வெளியே அனுப்பப்பட்டமை கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினது செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்கள் தன்னிச்சையாக செயற்பட்டு வருவதாகவும் எல்லை மீறிப் போவதாகவும் மாவை சேனாதிராஜா கூறியதனை அடுத்து ஊடகவியலாளர்கள் வெளிநடப்புச் செய்திருந்தனர்.
இதனிடையே சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த சந்திப்பு நேற்று இரவு வரை நீடித்தது. சிவில் அமைப்புப் பிரதிநிதிகளால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளிப்பதாக மாவை சேனாதிராஜா கூறினார். முன்னதாக ஊடகவியலாளர்கள் அங்கு கூடியிருந்த நிலையில் தமது எல்லைக்குட்பட்டே விளக்கமளிப்பதாக கூறிய அவர் ஊடகவிலாளர்கள் இருக்கும் பட்சத்தில் சுதந்திரமாக கதைக்க முடியாது எனவும் கூறினார். இதனையடுத்தே ஊடகவிலாளர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
No comments:
Post a Comment