Wednesday,December,14,2011புதுடில்லி : லண்டனில், இந்தியர்கள் இருவரை சுட்டுக் கொன்ற வங்கதேசத்தவருக்கு, 26 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு, லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள பாரஸ்ட் கேட் என்ற இடத்தில், கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், இந்தியர்களான அமர்ஜித் சிங்,52, இவருடைய உறவினர் ராஜிந்தர் சிங்,25, வங்கதேசத்தை சேர்ந்த அயூப்கான் ஆகியோருக்கிடையே, மோதல் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அயூப் கான், தான் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கியை எடுத்து, அமர்ஜித் சிங்கையும், ராஜிந்தர் சிங்கையும், சரமாரியாக சுட்டுத் தள்ளி விட்டார். உடனடியாக, வங்கதேசத்துக்கு தப்பிச் சென்று விட்டார். கடந்த ஆண்டு வங்கதேசம், அயூப்கானை பிரிட்டனிடம் ஒப்படைத்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், கார் நிறுத்துவது தொடர்பான சாதாரண விஷயத்துக்கு, இயந்திரத் துப்பாக்கியை பயன்படுத்தி, அப்பாவிகள் இருவரை சுட்டுத் தள்ளிய குற்றத்துக்காக, அயூப்கானுக்கு 26 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
No comments:
Post a Comment