Wednesday, December 14, 2011

லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் மற்றும் நான்கு பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட ஐவர் பணிநிறுத்தம்!

Wednesday,December,14,2011
இலங்கை::லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மிஹிந்தளை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் நான்கு பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட ஐவர் பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பௌர்ணமி தினத்தன்று சட்டவிரோதமான முறையில் மது விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் லஞ்சம் பெற்றுக் கொண்டதன் பின்னர் தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அதன்போது தம்மிடம் கைப்பற்றிய மது போத்தல்களைவிட குறைந்த எண்ணிக்கையிலான மது போத்தல்களையே இவர்கள் நீதிமன்றில் சமர்பித்ததாகவும் லஞ்சம் வழங்கிய நபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அநுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த ஐந்து பொலிஸாரையும் பணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment