Wednesday,December,28,2011இலங்கை::ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கீழா புலிகளின் தலைவரான கே.பி சுதந்திரமாக இருக்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். இப்படியான நிலைமையில், சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் எனக் கூறுவது நகைப்புக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ரவி, சரத் பொன்சேக்கா நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். காய்கறி விவகாரத்தில் கூட தலையிட்ட ஜனாதிபதி, உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாவது தொடர்பிலும் தலையீடுகளை மேற்கொண்டு, பெறுபேறுகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும் எனக் உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதியின் தலையீடுகளை காரணமாகவே உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகளில் குளறுப்படிகள் ஏற்பட்டுள்ளதா எனவும் கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
வேறு நாடுகளில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டால், அதற்கு பொறுபேற்று சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்வார். இதனால் உயர்க்கல்வி அமைச்சர் தொடர்ந்தும் கேலிக்குரிய விடயங்களை பேசாது,ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வை வழங்க வேண்டும் எனவும் கருணாநாயக்க கூறியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்த 8 லட்சமாவது சுற்றுலாப் பயணியை வரவேற்று உபசரித்த அரசாங்கத்தினால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது போயுள்ளது எனவும் இது மிகவும் கவலைக்குரிய நிலைமை எனவும் ரவி கூறியுள்ளார். தங்காலை நடைபெற்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு, அரசியல் பின்னணியின்றி, தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment