இலங்கையில் போதைப்பொருள் வியாபாரம்: இவ்வருடம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 26 ஆயிரத்து 316 பேர் கைது:1 இலட்சத்து 38 ஆயிரத்து 964 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருட்கள் மீட்பு அதிர்ச்சித் தகவல்கள்!!
Wednesday,December,28,2011இலங்கை::இலங்கையில் இவ்வருடம் ஆரம்பத்திலிருந்து இன்று வரை நாடளாவிய ரீதியில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 26 ஆயிரத்து 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 1 இலட்சத்து 38 ஆயிரத்து 964 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பிரதேச பொலிஸ் நிலையங்களினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு நீதி மன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment