Tuesday, December 06, 2011ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, இத்தனை நாள் எங்கிருந்தார் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை இன்டர்போலிடம் ஒப்படைக்க வேண்டுமென அண்மையில் ஜயலத் ஜயவர்தன விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச காவல்துறையினர் குமரன் பத்மநாதனுக்கு எதிராக பிடிவிராந்து பிறப்பித்து இருபது ஆண்டுகள் கடந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜயலத் ஜயவர்தன திடீரென விழித்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் (புலி ஆதரவான) தமிழ் மக்களில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோரை இனங்கண்டு நடவடிக்கை எடுப்பதற்காக குமரன் பத்மநாதனை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டு வருவதாக சர்வதேச ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment