Tuesday, December 06, 2011முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு நாட்டின் பொது மக்களது ஆதரவு திரட்டப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாரியளவில் பொதுமக்களிடம் கையொப்பங்களை திரட்டி மஜகர் ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 10ம் திகதி உலக மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளதாகவும், அந்தத் தினத்தில் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நோக்கில் மஜகருக்கான கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை இணங்கியுள்ளது எனவும், அது தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பிரகடனங்களுக்கு அமைய சரத் பொன்சேகாவிற்கு தண்டனை வழங்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் ஆதரவுடன் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் முனைப்புக்கள் தீவிரப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment