Tuesday, December 06, 2011ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் காவல் டிசம்பர் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். இதனிடையே மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டம் நடத்த மீனவ அமைப்புகள் நாளை கூடியுள்ளன. தமிழக மீனவர்கள் கடந்த நவம்பர் 28ம் தேதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment