Monday, December 5, 2011

தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

Monday, December 05, 2011
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கடந்த ஆண்டு மகா தீபமும், பவுர்ணமியும் ஒரே நாளில் அமைந்தது. ஆனால், தற்போது வரும் 8ம் தேதி மகா தீபமும், 9ம் தேதி இரவு பவுர்ணமி கிரிவலமும் வருகிறது. கார்த்திகை மாத கிரிவலம் செல்ல உகந்த நேரம், வரும் 9ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.21 மணிக்கு தொடங்கி, 10ம் தேதி சனிக்கிழமை இரவு 8.43 மணிக்கு முடிகிறது. பவுர்ணமி கிரிவலம் செல்ல 9ம் தேதி இரவு ஏற்றதாகும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வரும் விநாயகர் தேர்.

No comments:

Post a Comment