Monday, December 05, 2011ரஷ்யா: ரஷ்யாவில் நேற்று நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இதில் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி, இறுதி பெருபான்மையை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 17 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய ரஷ்யா கட்சி, அதில் சுமார் 46 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளதாக, ரஷ்யாவின் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளர்.
கம்யூனிஸ்ட் கட்சி 21 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. 450 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில், தற்போது ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு 315 உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிரதமராக இருக்கும் விளாடிமிர் புடின், அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அதிபராக இருக்கும் மெத்வதேவ், தேர்தலுக்குப் பிறகு பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது அவர்களுடைய கட்சி, குறைந்த அளவே முன்னிலை பெற்றுள்ளதால் மெத்வதேவ் பிரதமர் ஆவதில், சிக்கல் ஏற்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment