Monday, December 05, 2011தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று மீண்டும் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த சந்திப்பின் போது அரசாங்கம் முன்வைக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில் அடுத்த கட்ட தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக (புலிகளின்) நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கனவுலகத்தில் இருக்கிறது-சம்பிக்க ரணவக்க!
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தற்போது கனவு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக மின்சக்தி சக்திவலு துறை அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவர்களின் நடவடிக்கைகள் தமிழ் சமூகத்தை பிழையான வழிக்கு இட்டுச் செல்வதாகவு அவர் குறிப்பிட்டார்.
அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்
No comments:
Post a Comment