Monday, December 5, 2011

பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவில் 2009 முதல் இந்தாண்டு ஏப்ரல் வரை, மொத்தம் 104 பேர் கைது!

Monday, December 05, 2011
ஹூஸ்டன்: அமெரிக்காவில், கடந்த 2009 முதல் இந்தாண்டு ஏப்ரல் வரை, மொத்தம் 104 பேர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், பாதிப் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்."அமெரிக்காவில் இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற தலைப்பில், "பேக்கர் இன்ஸ்டிடியூட்' என்ற அமைப்பைச் சேர்ந்த ஜான் நெகஸ் ஸ்சான் என்பவர், சமீபத்தில் ஓர் ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:கடந்த 2009 முதல் இந்தாண்டு ஏப்ரல் வரை, மொத்தம் 104 பேர், பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிப் பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள். 22 சதவீதம் பேர் அமெரிக்கர்கள். 7 சதவீதம் பேர் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள். 5 சதவீதம் பேர் விசா மூலம் அமெரிக்காவுக்கு வந்தவர்கள்.இவர்களில், 66 சதவீதம் பேர், மத்திய கிழக்கு, சோமாலியா, தெற்காசியா அல்லது பால்கன் பகுதி ஆகியவற்றிற்கு, அடிக்கடி பயணம் மேற்கொண்டுள்ளனர்.இவர்களில் 70 சதவீதம் பேர், சர்வதேச பயங்கரவாத அமைப்பான, அல்-குவைதா மற்றும் அதன் கிளைகளோடு தொடர்புடையவர்கள். மூன்றில் இரண்டு பங்கு பேர், 34 வயதுக்கும் குறைவானவர்கள்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment