Monday, December 5, 2011

இலங்கையில் இயங்கிவந்த ஐந்து இணையதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல்!

Monday, December 05, 2011
இலங்கையில் இயங்கிவந்த ஐந்து இணையதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர மற்றும் அதன் நிறைவேற்றுச் சபை உறுப்பினர் உதய களுபதி ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

அரச செய்திப் பணிப்பாளர் நாயகம், வெகுசன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இணையதளங்களுக்குத் தடை விதிக்கப்படுவதன் மூலம் மக்கள் தகவல்களை அறிவதற்கான உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது தடை செய்யப்பட்டுள்ள இணையதளங்களில் தனிநபர்களின் நற்பெயருக்குக் களங்களம் ஏற்படுத்தும் வகையிலோ அல்லது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலோ எவ்வித செய்தியும் வெளியிடப்படவில்லை என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இணையதளங்களுக்கு எதிரான தடையினால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்து தடையை நீக்குவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment