Monday, December 5, 2011

யுத்தம் நடைபெற்ற உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலைமையில் முன்னேற்றம்-UN அபிவிருத்தி திட்டத்தின் பணிப்பாளர் டக்ளஸ் கே!

Monday, December 05, 2011
யுத்தம் நடைபெற்ற உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையானது போருக்குப் பின்னரான நிலைமையில் முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அதாவது பொருளாதார சமூக மற்றும் ஏனைய துறைகளில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போதைய நிலைமையில் இலங்கையில் தன்னார்வ தொண்டர் சேவைகள் சிறப்பான முறையில் இடம்பெற வேண்டும் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பணிப்பாளர் டக்ளஸ் கே தெரிவித்தார்.

கொழும்பு இன்டர்கொண்டினென்டல் ஹோட்டலில் இன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் தன்னார்வ தொண்டர் சேவை தொடர்பான அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தன்னார்வ தொண்டர் அமைப்பின் இலங்கை அலுவலகத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் பல நாடுகளில் இடம்பெறும் அறிக்கை வெளியீட்டுக்கு சமாந்திரமாக இலங்கையிலும் தன்னார்வ தொண்டர் சேவை தொடர்பான முதலாவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment