Monday, December 5, 2011

கொழும்பு - தூத்துக்குடிக்கு இடையிலான பயணிகள் எம்.வி. ஸ்கோஷியா பிரின்ஸ் கப்பலை தடுத்து வைக்குமாறு பிடியாணை!

Monday, December 05, 2011
கொழும்பு - தூத்துக்குடிக்கு இடையிலான பயணிகள் கப்பல்சேவையில் ஈடுபட்ட இந்தியாவின் எம்.வி. ஸ்கோஷியா பிரின்ஸ் கப்பலை கைப்பற்றி தடுத்து வைக்குமாறு பிடியாணை பிறப்பித்து கொழும்பு மேல் நீதிமன்றம் துறைமுக அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.

தென் இந்திய நிறுவனம் ஒன்று கொழும்பு மேல் நீதிமன்றில் செய்துள்ள மனுவொன்றை விசாரணை செய்த நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இக்கப்பலுக்கு உணவு விநியோகித்தமைப்பாக ஒன்றரை கோடி இந்திய ரூபாவை தமக்கு செலுத்த வேண்டியுள்ளதாக அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும் அதனை தடுத்து வைக்குமாறு உத்தரவிடும்படியும் கோரி இந்திய நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.

No comments:

Post a Comment